விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தனியார் திருமணம் மண்டபத்தில் உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் 2019 மற்றும் 2020 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து புதிய தலைவராக அன்பழகன், செயலாளராக சுவாமிநாதன், பொருளாளராக ரமேஷ்பாபு, ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இவ்விழாவில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா குமரகுரு, ஸ்ரீ சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் யேத்தியஸ்வரி ஆத்ம விகாசபிரியா, ரோட்டரி சங்கத்தின் கவர்னர் கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்கள்.
இதில் உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை மற்றும் பல்வேறு அரசு ஊழியர்களுக்கு, கேடயம் வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது .மேலும் பெண்களுக்கு தையல் எந்திரமும், வறுமைக் கோட்டு உள்ளோருக்கு தொழில் செய்ய இஸ்திரி பெட்டி, தள்வண்டிகளும் என பல்வேறு நலத்திட்ட உதவிகளும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்க பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.