Mnadu News

அதிமுக குறித்து வதந்தி பரப்பப்படுகிறது -அமைச்சர் ஜெயக்குமார்

ஒற்றை தலைமை சர்ச்சை குறித்தும் தேர்தல் குறித்தும் அதிமுகவில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆலோசனைகூடத்தில் அழைப்பிதழ் கொடுத்த 210 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும் கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகள் கையில் செல்போன் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது .

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ,உறவினர்களின் துக்க நிகழிச்சிக்கு சென்றதால் ஓ .எஸ் மணியன் கூட்டத்திற்கு செல்லவில்லை.மேலும் எம்எல்ஏக்கள் பிரபாவதி ,கலைச்செல்வன் ,இரத்தின சபாபதி போன்றோர்களும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் ,மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நிறைவடைந்த பிறகும் உயர்மட்ட நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த கூட்டத்தில் அனைவரும் எதிர்பார்த்து வந்த ஒற்றை தலைமை குறித்து பேசவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது ,அதிமுகவில் பிளவு என்பது வதந்தி என்று கூறியுள்ளார்.தேர்தலை தொடர்ந்து நடைபெற்ற சாதாரண கூட்டம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார் .

Share this post with your friends