Mnadu News

மக்களின் தேவைகளுக்கான செயற்கைகோள் உருவாக்கப்படும் – மயில்சாமி அண்ணாதுரை

விண்வெளி ஆராய்ச்சி படிப்பு குறித்து மாணவர்களிடத்தில் நல்ல விழிப்புணர்வு உள்ளதாக, இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார் . விழுப்புரத்தில் செய்தியாளர்களின் சந்திப்பின் போது அவர் கூறுகையில் , மாணவர்களும் செயற்கைகோள்களை தயாரிப்பதற்கு இஸ்ரோ வாய்ப்புகளை வழங்கி வருவதாக கூறியுள்ளார் . உலகளவில் செயற்கைகோள் தொழில் நுட்பத்தில், அனைத்து துறைகளுக்கும் உதவிடவும், மக்களின் தேவைகளுக்கான செயற்கைகோள்களை உருவாக்குவதிலும இந்தியாவே முதலிடத்தில் உள்ளதாகவும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

Share this post with your friends