உலக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டன. இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது .
உற்ச்சாகத்துடன் மைதானத்தில் களமிறங்கிய இந்தியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் மற்றும் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் அதிரடியாக விளையாடிய தவான் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .
அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் பொறாமையாக ஆடி அணிக்கு ரன்கள் சேர்த்தார் பின்னர் வந்த ஹர்திக் பாண்டிய மற்றும் டோனி அதிரடியாக விளையாடினர் இறுதியில் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்தது.
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 300 ரன்களை கடந்தது இதுவே முதல்முறையாகும் .
353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர் .தொடர்ச்சியாக ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 50 ஓவர் முடிவில் 316 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .
36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியை பதிவுசெய்துள்ளது .