அதிமுகவுவில் ஒற்றைத் தலைமை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .இந்நிலையில் ,மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நிறைவடைந்த பிறகும் உயர்மட்ட நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடைபெற்றது . ஆனால் அந்த கூட்டத்தில் அனைவரும் எதிர்பார்த்து வந்த ஒற்றை தலைமை குறித்து பேசவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது ,அதிமுகவில் பிளவு என்பது வதந்தி என்று கூறியுள்ளார்.தேர்தலை தொடர்ந்து நடைபெற்ற சாதாரண கூட்டம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார் .
மேலும் அவர் கூறுகையில் அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது அவசியமற்ற சர்ச்சை.எதிரிகளின் எண்ணத்தில் மண் விழும் வகையில் நேற்றைய கூட்டம் எவ்வித பிரச்னையுமின்றி நடைபெற்றது என ஜெயக்குமார் கூறியுள்ளார்.