தமிழ் சினிமாவை பொறுத்தவரை அஜித்,விஜய் ரசிகர்களின் போட்டிக்கு என்றைக்குமே பஞ்சம் இருக்காது.இந்நிலையில்,அஜித் மற்றும் விஜய் நடிப்பில் வெளிவந்த இரண்டு படங்கள் வர உள்ளது.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அதன்படி கடந்த 25-ம் தேதி அகலாதே பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியான 24 மணி நேரத்திலேயே 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
முன்னதாக விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தின் சிங்கப் பெண்ணெ பாடல் கடந்த 23-ம் தேதி வெளியானது. இந்தப் பாடல் வெளியாகி 40 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வைகளைப் பெற்றது. இந்த சாதனையை 24 மணி நேரத்தில் முறியடித்துள்ளது அஜித்தின் ‘அகலாதே’ பாடல்.