‘மிஸ்டர் லோக்கல்’ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார். இதில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘எஸ்.கே 16’ என்ற தலைப்பு வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மனுவேல் நடித்து வருகிறார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, பாரதிராஜா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜின் பிறந்தநாளை முன்னிட்டு டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் பாடலை, பதிவு செய்துள்ளனர்.