வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பசலிகுட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் மெயின் ரோட்டிற்கு மிக அருகில் இருப்பதால் விபத்து ஏற்படும் ஆபாய நிலை உள்ளதால் இப்பள்ளிக்கு தமிழக அரசின் சார்பில் சுற்றுசுவர் அமைப்பதற்காக ஆணை பிறப்பித்து பல மாதங்கள் ஆகியுள்ளது .
ஆனால் பள்ளியின் சொந்தமான இடத்தில் தனிநபர் மளிகை கடை வைத்துள்ளதால் அதை அகற்றி சுற்றுசுவர் அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள்100க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
தகவல் அறிந்து விரைந்து சென்ற திருப்பத்தூர் கிராமிய காவல்துறை போலிசார் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் சுமூக பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக அதன் துறை சார்ந்த அதிகாரிகளை நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.