சென்னையின் பல முக்கிய இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை அதிகம் ஏற்பட்டுள்ளது இந்நிலையில் சென்னையில் உள்ள அணைத்து ஏரிகளும் வறண்டு விட்டதால் மக்கள் குடிநீர் இன்றி கடும் அவதிக்கு உல்லையி இருக்கின்றனர் .
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தண்ணீருக்காக மக்கள் அவதிப்படுவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் வேறு எந்தெந்த வழிகளில் தண்ணீர் பெறப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினர் .
இது தொடர்பான விவரங்களை விரைவில் தாக்கல் செய்ய தமிழக அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர் .