காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 12 ஆம் நாள் காவி பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சி கொடுத்தார்.இன்று மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்கள் அத்திவரதரை தரிசிக்க வருவதையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு என பக்தர்கள் தரிசனம் நேரம் மாற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 12 ஆம் நாளான இன்று அத்திவரதருக்கு காவி நிற பட்டாடை அணிவித்து திருவாராதனம் செய்யப்பட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு காலை 5 மணி முதல் பக்தர்களின் தரிசனத்திற்காக வசந்த மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய தினம் , வசந்த மண்டபத்திலுள்ள அத்தி வரதரை தனது குடும்பத்துடன் தரிசனம் மேற்கொள்ளும் மாண்புமிகு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தரிசனம் முடிந்த பின்னர் அங்கிருந்து மீண்டும் கார் மூலம் ஹெலிகாப்டர் இறங்குதளத்திற்கு சென்றடைந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஆந்திரா மாநிலத்திற்கு செல்கிறார். மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்கள் காஞ்சிபுரம் வருகையையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது காஞ்சிபுரம் நகரமே பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்கள் அத்திவரதரை தரிசனம் மேற்கொள்ளவுள்ளதால்
பிற்பகல் 1 மணிமுதல் 5 மணிவரை பொது தரிசனமும் மற்றும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை VIP தரிசனமும் நிறுத்தி வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.