சீனாவில் கடந்த ஞாயிறன்று டொங்குவான் என்ற இடத்தில் கணவரிடம் கார் ஓட்டக் கற்றுக் கொள்ளும் பெண் ஒருவர், வாகனத்தை இயக்கத் தொடங்கியதும் திடீரென யு டர்ன் எடுத்து அலுவலகத்துக்குள் இடித்து நுழைந்தார். இதில் பணியில் இருந்த ஊழியர்கள் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் விபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அப்பெண் அழுத்தியதாகவும் முறையாக பயிற்சி பெறாத பயிற்றுனருடன் வாகனத்தை இயக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அலுவலகத்தில் பணியாற்றிய ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் .