உலக கோப்பை போட்டியின் வெற்றி யாருக்கு என்னும் சொல்லும் நாள் நெருங்கி கொண்டு வருகின்றன.இந்நிலையில் முதல் அரையிறுதி போட்டி இன்று நடைபெற உள்ளது .இந்நிலையில் ,இந்தியா மற்றும் நியூசிலாந்து போட்டி நடைபெறும் மைதானத்தின் வான்பகுதி பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ-க்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் கடிதம் எழுதியுள்ளனர்.இந்நிலையில் ,இன்று நடைபெறும் போட்டியில் ஐம்பது சதவிகித்திருக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. மழையினால் ஆட்டம் நடைபெறாமல் இருந்தால் நாளை புதன்கிழமை போட்டி நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.