தென்காசியை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் விதி 110 ன் கீழ் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார். இதனையடுத்து செங்கல்பட்டும் தனி மாவட்டமாக உதயமாகிறது என முதல்வர் அறிவித்திருந்தார் .மேலும் அறிவித்த இரண்டு மாவட்டங்களுக்கும் தனி மாவட்ட ஆட்சியர் பணியமர்த்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாகிறது எனவும் ,மேலும் நெல்லை மாவட்டத்திலிருந்து தென்காசி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாகிறது எனவும் அறிவித்திருந்தார் .
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவிக்கையில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக்கும் கோரிக்கை உள்ளதால், அதுபற்றியும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டு கூறியுள்ளார் .