ஜம்மு காஷ்மீரில், அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதால், மாநிலம் முழுவதும் அமைதி நிலவுவதாக, காவல்துறை தெரிவித்திருக்கிறது.ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் இதனை கூறியிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாகும் நிலையில், எந்தவொரு இடத்திலும், வன்முறைகளோ, அசம்பாவித சம்பவங்களோ நிகழவில்லை எனக் அவர் தெரிவித்திருக்கிறார்.அவசர தேவைகள், மற்றும் பணிகளுக்காக மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதாகவும், பொது இடங்களில் பெருந்திரளாக கூட தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், காஷ்மீர் டிஜிபி தெரிவித்திருக்கிறார்.