திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் 13ஆவது தேசிய நெல் திருவிழா கோலாகலமாக துவங்கியுள்ளது .இந்த திருவிழாவில் உணவு வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நெல் திருவிழாவில், மாப்பிள்ளை சம்பா,தேங்காய் பூ சம்பா, கம்பன் சம்பா, சீரக சம்பா, கருங்குருவை, பூங்கார், சிவப்பு கவுனி, வள்ளி கார், மடு முழுங்கி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் வேளாண் பொருட்கள் பொதுமக்களின் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த நெல் திருவிழாவில் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், வெளிமாநில விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .