கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கன்னம்பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (30) என்பவர் தனது மனைவி தமிழ் செல்வி(26) மகன் ஈஸ்வரன் (6) மகள் நித்திகா (3) ஆகியோருடன் தனது பைக்கில் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு திருமண விழாவிற்கு சென்று விட்டு சூலூர் திரும்பும் போது அவிநாசி பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மகன் ஈஸ்வரன் சம்பவ இடத்தில் பலியானார்.
பலத்த காயங்களுடன் அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு சென்றதில் அங்கு ரமேஷ் உயிரிழந்தார். மேலும் இன்று காலை சிகிச்சை பலனின்றி தமிழ்ச் செல்வியும் உயிரிழந்தார். அதிர்ஷ்ட வசமாக 3 வயது குழந்தை நித்திகா உயிர் தப்பினார். பரிதாபமான இந்த விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.