ஓசூர் அருகே இரண்டு நாட்களாக விவசாய தோட்டங்களை12 காட்டு யானைகள் சேதப்படுத்திக் கொண்டிருந்தது. இந்நிலையில் சேதப்படுத்திய12 காட்டு யானைகளை இன்று சானமாவு வனப்பகுதிக்கு வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினார்கள்.இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.
கோடை காலம் என்பதால் தண்ணீர் தட்டுப்பாட்டால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகள் நோக்கி வருவது வாடிக்கையாக இருப்பதால் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வனத்துறையினரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.