Mnadu News

உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் புலிகள் மற்றும் பறவைகள் கோடை கால கணக்கெடுக்கும் பணி தொடங்கியது  

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனச்சரகங்களான உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் இன்று வனவிலங்குகள் மற்றும் ஊண் உண்ணிகளுக்கான கோடை கால கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதில் 42 குழுக்களாக பிரிந்து சென்று 140பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியில் விலங்குகளின் கால் தடங்கள் மற்றும் அவற்றின் எச்சங்களையும் வைத்தும் ஜீ.பி.எஸ் கருவிகயை கொண்டும் பணிகள் நடைபெருகிறது.

இந்த கணக்கெடுப்பு பணியில் உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் தலைமையில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகர்களுடன் உதவியுடன் வனத்துறையினருடன் தன்னார்வலர்களும் இணைந்து வனவிலங்குகள் கணக்கெடுக்குப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More