கோடைகாலம் வந்தாலே ஏற்படுகின்ற வெயிலின் தாக்கத்தை குறைத்து கொள்ள மக்கள் அனைவரும் குற்றாலம், ஊட்டி ,கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு சென்று மகிழ்வார்கள். அந்த வகையில் வருடந்தோறும் மே மாத இறுதியில் தொடங்கும் குற்றால சீசன் ஆகஸ்ட் வரை 3 மாதங்களுக்கு நீடிக்கும். இதையொட்டி நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றால சீசன் ஓரிரு வாரங்களில் தொடங்கி அருவிகளில் தண்ணீர் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடேய குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர், உடைகள் மாற்ற அறைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்தேக்கம் அமைத்து வருடம் முழுவதும் குற்றால அருவிகளில் தண்ணீர் விழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More