சென்னையில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிதிருக்கவேண்டும் என்று உச்ச நீதி மன்றம் ஆணையின் பேரில் சென்னை போக்குவரத்து போலீசார் தற்போது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர் .
இந்நிலையில் சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் காலை 8 மணி முதல் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தலைக்கவசம் இல்லாமல் பயணிப்போர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
அபராதம் விதிக்கும் இ சலான் எந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதால், விரைவாக அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக போக்குவரத்து போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.