இயக்குனர் சக்ரி டோலெட்டி இயக்கத்தில், நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘காமோஷி’ உருவாகியுள்ளது. பிரபல நடிகை தமன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், பிரபுதேவா, பூமிகா சாவ்லா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபுதேவா, தமன்னா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவி 2’படமும் மே 31ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது ‘காமோஷி’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.