முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அடுத்த பேக்கரும்பிலுள்ள அவரது நினைவிடத்தில் கலாமின் குடும்பத்தினர், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பேக்கரும்பில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் அப்துல் கலாமுக்கு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.அவரது 4வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு கலாமின் மூத்த சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயர் உள்பட குடும்பத்தினர் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்கள், மாணவர்கள் உட்பட பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.