Mnadu News

பணியாளரை தேடி வரும் ட்விட்டர் நிறுவனம்

ட்விட்டர் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ,தனது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை நிர்வகிக்க திறமையான நிர்வாகியைத் தேடி வருவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தனது நிறுவன வேலைவாய்ப்பு பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ள அந்த நிறுவனம், நல்ல கற்பனை வளத்துடன் கதை சொல்லக்கூடிய திறனுள்ள நபருக்கு இந்த வாய்ப்புள்ளது என அறிக்கை தெரிவித்துள்ளார் .பின்னர் நிறுவன எடிட்டோரியல் பிரிவின் அமைப்பின் கீழ் நிர்வாக பொறுப்புகளை கவனிக்கவேண்டும் எனக் கூறியுள்ள ட்விட்டர் நிறுவனம் , தேர்வாகும் நபரை, அமெரிக்காவில் உள்ள அலுவலகங்களின் ஒன்றில் பணியமர்த்த உள்ளதாகவும் கூறியுள்ளது.

Share this post with your friends