உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிக்கர் தவானுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து ஷிக்கர் தவான் அவரது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.சிறகுகளுக்கு பதிலாக மன உறுதியால் நாம் பறக்கிறோம், அதனை கத்தரித்துவிட முடியுமா என்ற உருது மொழி கவிஞர் ரஹட் இந்தோரியின் கவிதையை பதிவிட்டுள்ளார்.