Mnadu News

பொன்னியின் செல்வன் படத்தில் மேலும் இரண்டு நடிகைகள்…

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று நாவலை படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.ஆனால் இதில் முக்கியமான கதாபாத்திரங்களில் எந்த பிரபலங்கள் நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிக்கின்றனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தற்போது அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை ஐஸ்வர்யாராய் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது என்று அவர் கூறினார். படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் இறுதி பட்டியல் தெரியவரும். கதையில் 60-க்கும் மேற்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.பொன்னியின் செல்வன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர். பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளை புகுத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் பட நிறுவனமும் லைகா புரொடக்‌ஷனும் இணைந்து இந்த படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More