Mnadu News

கள்ளக்குறிச்சி அருகே வீடு புகுந்து கொள்ளை அடித்த இருவர் கைது

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ளது கிருஷ்ணாபுரம் கிராமம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவ்வூரைச் சேர்ந்த பாக்கியம் என்பவருடைய வீட்டில் 5 பவுன் கொள்ளை அடிக்கப்பட்டது. இதேபோல் அதே ஊரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்கின்ற ஆசிரியர் வீட்டில் இரண்டு பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது இந்த இரு சம்பவங்கள் குறித்தும் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் தீவிர தேடுதலுக்கு பின்னர் இன்று பெங்களூரைச் சேர்ந்த கூலி நகர் நந்தினி லே-அவுட்டில் வசிக்கும் மாணிக்கம் வயது 23 என்பவரும் சின்னசேலம் அருகே உள்ள அமைய கரம் கிராமத்தைச் சேர்ந்த இளம் சிறார் பச்சமுத்து வயது 16 என்பவரும் பிடிபட்டனர். இந்த இரண்டு நபர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 7 சவரன் நகை மற்றும் சூரி கத்தி கடப்பாரை மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம்  உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்த பின்னர் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

Share this post with your friends