பிரபல நகைச்சுவை நாடக நடிகருமான புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் காலமானார் .66 வயதாகும் இவர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .இந்நிலையில்,தீவிர சிகிச்சை பலனளிக்காமல் பிற்பகல் 2 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.இவர் தமிழில் பஞ்சதந்திரம் ,சதிலீலாவதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
திரையுலகம் முழுவதும் இவரது மறைவிற்கு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், “நகைச்சுவை நிலைக்கும்” என கிரேசி மோகன் மறைவு குறித்து ட்விட்டரில் கவிஞர் வைரமுத்து இரங்கல்.
கிரேசி மோகன் மறைவு எதிர்பாராதது.
ஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது.
அவர் வெறும் நாடக ஆசிரியர் மட்டும் அல்லர். வெண்பா எழுதத் தெரிந்த விகடகவி. யாரையும் வருத்தப்படவைக்காத நகைச்சுவையாளர் எல்லாரையும் வருந்தவிட்டுப் போய்விட்டார். சோகம் மறைந்து போகும்; நகைச்சுவை நிலைக்கும்.— வைரமுத்து (@Vairamuthu) June 10, 2019