Mnadu News

இந்தியில் வீரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

வீரம் படத்தின் இந்தி ரீமேக் பச்சன் பாண்டே என்ற டைட்டிலுடன் உருவாகியுள்ளது.அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2014-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி ஹிட் அடித்த படம் வீரம். இந்தப் படத்தில் தமன்னா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.தமிழில் ஹிட் அடித்த இந்தப் படம் தெலுங்கில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் ஆனது. இந்தப் படத்தில் பவன் கல்யாண் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இந்தி ரீமேக் பச்சன் பாண்டே என்ற டைட்டிலுடன் உருவாகியுள்ளது. இதில் நடிகர் அக்‌ஷய்குமார் நடித்துள்ளார்.இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், கருப்பு லுங்கி, கழுத்தில் தங்கச் சங்கிலிகள், கையில் நுன்சாக் ஆயுதத்துடன் தோன்றியுள்ளார் நடிகர் அக்‌ஷய்குமார்.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More