Mnadu News

மத்திய நிதி அமைச்சரை சந்தித்தார் தமிழக துணை முதலவர்

தமிழகத்தின் துணை முதலமைச்சரும் மாநில நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். நேற்று அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை அவர் சந்தித்தார். நிதி அமைச்சகம் அமைந்துள்ள டெல்லி நார்த் பிளாக்கில் உள்ள நிர்மலா சீத்தாராமனின் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது .

இதனையடுத்து தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை விரைந்து வழங்கக் கோரும் கோரிக்கை மனுவை நிர்மலா சீத்தாராமனிடம் ஓ.பன்னீர்செல்வம் வழங்கியதாக கூறப்படுகிறது .

Share this post with your friends