கடந்த 2006 ம் ஆண்டு மதிமுகவை உடைக்க அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சி செய்கிறார் என்று மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு எதிராக 2006 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் ஒன்றை எழுதினார். இந்த கடிதத்தின் அடிப்படையில் அந்த காலகட்டத்தில் இருந்த திமுக அரசின் சார்பில் வைகோவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த அவதூறு வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்தும் வைகோவை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வைகோ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
மதிமுகவை உடைக்க மறைந்த முதல்வர் கருணாநிதி முயற்சித்தார் என்று கூறி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்க்கு கடிதம் எழுதிய வழக்கில் வைகோவை விடுவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை மீண்டும் சிறப்பு நீதிமன்றத்துக்கு விசாரிக்கும் என்றது..
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சாந்தி முன்னிலையில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டு வருவதால் இந்த வழக்கில் ஆஜராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு நீதிமன்றம் வந்தார். அப்போது நீதிபதி சாந்தி வழக்கை ஜீலை 15 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.