Mnadu News

ஏஎன் 32 ரக விமானவிபத்தில் உயிரிழந்த வினோத் ஹரிஹரன் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

ஏஎன் 32 ரக போர் விமானத்தில் கடந்த 3-ம் தேதி இந்திய விமானப் படையைச் சேர்ந்த 13 வீரர்கள் பயணித்தனர் . பயணித்த சிறிது நேரத்திலேயே அந்த விமானம் அருணாயச்சலில் விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

மோசமான வானிலையால் 17 நாட்களுக்குப் பின் நேற்று 13 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. இதில் தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஹரிஹரனும் ஒருவராவார். இன்று அதிகாலை டெல்லி விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்ட அவர்களது உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்த கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரை சேர்ந்த வினோத் ஹரிஹரன் அவரது உடல் கோவை சூலூர் விமானப்படைத்தளத்திற்கு கொண்டுவரப்பட்டது .

விமானப்படைக்கு சொந்தமான வாகனம் மூலம், ஒண்டிப்புதூர் பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு . உடல் வினோத் ஹரிஹரன் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends