Mnadu News

விஷாலை மட்டும் நடிகர் சங்க தேர்தலில் எதிர்ப்போம் – பிரபலம் அறிவிப்பு

நடிகர் சங்க தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தற்போது பதவி வகிக்கும் நிர்வாகிகளே அந்தந்த பதவிக்கு மீண்டும் போட்டியிடுவார்கள் என சமீபத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பிறகு நடிகர் நாசர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலில்பொதுச்செயலாளர் பதவிக்கு மீண்டும் விஷால் போட்டியிட்டால், நாங்கள் அவரை எதிர்ப்போம் என்றும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலை தவிர கார்த்தி உள்பட யார் களம் இறங்கினாலும் அவர்களை ஆதரிப்போம் என்றும். தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends