Mnadu News

சர்ச்சையை கிளப்பிய விவேக் ஓபராய் மீம்…

தேர்தல் கருத்துக்கணிப்போடு, நடிகை ஐஸ்வர்யா ராயை ஒப்பிட்டு வெளியிட்ட புகைப்படத்தை நீக்கிய நடிகர் விவேக் ஓபராய், அதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்பு, தேர்தல் முடிவு ஆகியவற்றை, ஐஸ்வர்யா ராயின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெண்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.மன்னிப்பு கேட்குமாறு விவேக் ஓபராயை எச்சரித்த போது அவர் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார்.இந்த நிலையில், எதிர்ப்பு வலுக்கவே, விவேக் ஓபராய் வருத்தம் தெரிவித்து இருப்பதுடன், அந்தப் புகைப்படத்தை தனது பக்கத்தில் இருந்து நீக்கி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share this post with your friends