வெய்யுலுார் என்று அழைக்கப்படும் வேலுாரில் தற்போது குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பருவ மழை தமிழகம் முழுவதும் இயல்பு நிலையை விட குறைவாக பெய்தாலும் வேலூர் மாவட்டத்தை பொருத்த மட்டில் அந்த மழையும் வரவில்லை என்பது தான் உண்மை .மாவட்டம் முழுவதும் நிலதடி நீர் மட்டம் அகல பாதளத்திற்க்கு சென்றதால் ஆழ்துளை கிணறுகளில் எதுவும் சொட்டு நீர் கூட வருவதில்லை.
இந்நிலையில்,வேலூர் கோட்டை சுற்று சாலை பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் செல்லும் பைப்பில் ஓட்டை ஏற்பட்டு அந்த தண்ணீர் சாலையில் ஒரு சிறு விரிசலில் கசிந்து வெளியே வருகிறது. அந்த தண்ணீரையும் விடாமல் அந்த பகுதி மக்கள் கை குழந்தைகளுடன் சிறு டம்பளரில் சுரண்டிசுரண்டி எடுத்து அதை குடங்களில் சேகரித்து வீட்டிற்க்கு எடுத்து செல்லும் பரிதாப நிலைக்கு சென்று உள்ளனர்.
ஒரு குடம் சேகரிக்க சுமார் ஒரு மணி நேரம் ஆனாலும் , பெண்கள் பொறுமையாக அமர்ந்து மிக ஆபத்தான நிலையில் கார் பஸ் லாரி என்று அனைத்து வாகனங்களும் செல்லும் பாதையில் நீரை சேகரித்து வருகின்றனர். வேலூரின் குடிநீர் பிரச்சனைக்கு இதுவே சான்றாய் உள்ளது.