தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தற்பொழுது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் கேரள அரசு தாமாகவே தண்ணீர் தர முன்வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில்,திமுக பொருளாளர் துரைமுருகன் அளித்துள்ள பேட்டியில் தமிழகத்தில் தற்பொழுது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என கூறினார் .
மேலும் ரயில்கள் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து தண்ணீர் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரைமுருகன்வலியுறுத்தினார்.இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டுவரப்பட்ட வரலாறும் உண்மை எனவும் அவர் தெரிவித்தார் .