தமிழகத்தில் தற்பொழுது குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது .மக்கள் அனைவரும் தண்ணீர் இல்லாமல் ஏற்படும் அபாயம் உள்ளது.இது குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,அவர் கூறுகையில் ,போதிய மழைப் பொழிவு இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதனால், மாற்று வழியில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள்அரசியலாக்கி வருவதாகக் குற்றம்சாட்டினார்.
தமிழகம் முழுவதும் 14 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் குடிநீர் வழங்க அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.சென்னையில் குடியிருப்புவாசிகளுக்கு லாரிகள் மூலம் 10,000 நடை தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என்று கூறிய அவர், வரும் நவம்பர் மாதம் வரை தண்ணீர் விநியோக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.அதிகமான தண்ணீர் தட்டுப்பாடு என பொய்த்தோற்றம் உருவாக்கப்படுகிறது என எஸ்.பி.வேலுமணி சுட்டி காட்டியுள்ளார்.