Mnadu News

மறைந்த கிரேசி மோகனை பற்றி கமல் என்ன சொன்னார் தெரியுமா…

பிரபல நகைச்சுவை நாடக நடிகருமான புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் காலமானார் .66 வயதாகும் இவர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .இந்நிலையில் ,தீவிர சிகிச்சை பலனளிக்காமல் பிற்பகல் 2 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.இவர் தமிழில் பஞ்சதந்திரம் ,சதிலீலாவதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் இவரது மறைவிற்கு பல்வேறு நடிகர் நடிகைகள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் .அந்த வகையில் மேடை உலகிற்கு இன்று கருப்பு தினம என நடிகர் மோகன் ராம் தெரிவித்தார்.

மேலும் நகைச்சுவை உலகிற்கு ஒரு பேரிழப்பு என நடிகை கோவைசரளா இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் பல திரை பிரபலங்கள் அவர்களது இரங்கலை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில்,கிரேஸி மோகனுடன் அதிக படங்களில் ஜோடி சேர்ந்த உலக நாயகன் கமல் அவர்கள் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் சோகத்துடன் மௌனமாக அங்கிருந்து புறப்பட்டார் .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More