அத்திவரதர் குளத்தை விட்டு வெளியில் வந்ததால், தமிழகத்தில் நல்ல மழை பெய்திருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவம் இன்று 38ஆவது நாளை எட்டியுள்ளது. நின்ற கோலத்தில் இருக்கும் அத்திவரதரை தரிசிக்க, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று அங்கு சென்றார். பத்து நிமிடங்களுக்கும் மேலாக அத்திவரதரை தரிசித்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், அத்திவரதர் வெளியில் வந்தால் நல்ல மழை பெய்யும் என்பது ஐதீகம் எனத் தெரிவித்தார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More