ஆகஸ்ட் 1 முதல் 17ஆம் தேதி வரை அத்தி வரதர் சயன கோலத்திலிருந்து நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
அத்திவரதர் தொடர்ந்து கோவிலிலேயே வைக்கப்படுவாரா என்ற கேள்விக்கு ஆகம விதிகளின் படியே முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.மேலும் தற்போது இரண்டு கூடுதல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு பக்தர்களுக்கு பல்வேறு கூடுதல் வசதிகள் செய்யப்படும் எனவும் அதை தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பார்கள் எனவும் தெரிவித்தார். எனவே பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் மேற்கொள்ள எந்தவித அச்சமும் இன்றி காஞ்சிபுரத்துக்கு வருகை தரவும் என தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.