Mnadu News

மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஐக்கிய ஜனதாதளம் லோக் ஜனசக்திக்கு இடமா

பீகாரில், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் மத்திய அமைச்சரவையில் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பீகார் மக்களவை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி மற்றும் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 40 இடங்களில் 39 இடங்களை கைப்பற்றியது.இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த சந்தோஷ் குஷ்வாகா, மகாபலி சிங், ராம்நாத் தாகூர் ஆகிய 3 பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது.இதேபோல், ராம்விலாஸ் பாஸ்வானுக்கு மீண்டும் அமைச்சராக வாய்ப்புள்ளது. ராம்விலாஸ் பாஸ்வான் தேர்தலில் போட்டியிடாதபோதிலும், ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.தன்னுடைய மகன் சிராக் பஸ்வானுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற தகவலை ராம்விலாஸ் பஸ்வான் மறுத்துள்ளார். அவர், அடுத்தாண்டு நடைபெறவுள்ள பீகார் சட்டப்பேரவை தேர்தலில் கவனம் செலுத்துவார் என ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்

Share this post with your friends