மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி இன்று லோக்சபாவில் பேசும்போது, விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு விருது வழங்கப்பட வேண்டும்,மேலும் அவரது மீசையை ‘தேசிய மீசையாக’ அறிவிக்க வேண்டும் என கூறினார்.
கடந்த மே 27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் துரதிருஷ்டவசமாக பாராசூட்டில் இறங்கினார். இதனால் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டார்.
விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட போதும் அந்த ராணுவ வீரர்கள் கேட்ட கேள்விக்கு வீரத்துடன் பதிலளித்தார் .
அதன் பின் அவர் சிறிது நாட்களுக்கு பின் இந்தியா ராணுவத்திடம் பாதுகாப்பாக ஒப்படிப்பப்பட்டார் . அபிநந்தன் அவர்களின் இந்த வீரம் மிகுந்த செயல் நாடு முழுவதும் பரவியது . நாட்டு மக்களின் அனைவரது பாராட்டுகளையும் பெற்றார் .
இந்நிலையில் அவரது வீரம் எவ்வாறு பலருக்கும் பிடித்துபோனதோ, அதனைப்போன்று அவரின் கம்பிரமான மீசையும் சிறுவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலருக்கும் பிடித்து போய்விட்டது. அபிநந்தன் மீசையால் கவரப்பட்ட இளைஞர்கள் பலரும் அவரைப் போன்று சிங்கம் ஸ்டைலில் கம்பீர மீசை வைத்து வருகின்றனர்.
இதனையடுத்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி இன்று லோக்சபாவில் பேசும்போது, விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு விருது வழங்கப்பட வேண்டும், மேலும் அவரது மீசையை ‘தேசிய மீசையாக’ அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.