Mnadu News

விங் கமாண்டர் அபிநந்தனின் படைப்பிரிவினருக்கு சிறப்பு பேட்ஜ் கொடுத்து கௌரவித்தனர் …

பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக, விங் கமாண்டர் அபிநந்தனின் படைப்பிரிவினருக்கு சிறப்பு பேட்ஜ்களை வழங்கி விமானப்படை கவுரவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் எஃப் 16 ரக போர் விமானத்தை, இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். இந்நிலையில் அவர் ராஜஸ்தானில் உள்ள சூரத்கர் விமானப் படை தளத்தில் மீண்டும் பணியில் சேர்ந்தார்.

இதனிடையே அவரது படைப்பிரிவுக்கு ‘ராஜாளிகளை வீழ்த்துபவன்’ என்ற பொருளமைந்த ‘பால்கன் ஸ்லேயர்’ என்ற சிறப்பு பேட்ஜ்களை, வழங்கி இந்திய விமானப்படை அவரை பெருமைப்படுத்தியுள்ளது. அதில் சிவப்பு நிற எஃப் 16 ரக விமானம் மீது, குறிவைக்கப்பட்டிருப்பது போன்ற அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. அபிநந்தனின் வீர தீர செயலுக்காக, அவரது படைக்கு இந்த சிறப்பு ‘பேட்ஜ்’ வழங்கியதாக இந்திய விமானப்படை விளக்கம் அளித்துள்ளது.

Share this post with your friends