Mnadu News

குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க பைப்லைன் பொருத்தும் பணிகள் தொடங்கியது

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த பஞ்சத்தைப் போக்கும் வகையில் தமிழக முதல்வர் கடந்த வாரம் சென்னை வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் என அறிவித்தார். அதற்கான நிதியை முதற்கட்டமாக 65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் கொண்டு வந்து செல்வதற்கான ஆய்வு பணிகள் கடந்த வாரம் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டனர். நேற்று இரயில்வே முதன்மை செயற்பொறியாளர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து இன்று பைப் லைன் புதைப்பதற்கான ராட்சத பைப்புகள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இன்னும் இரு தினங்களில் பைப்லைன் பொருத்தும் பணிகள் அதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரி தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் மத்திய ரயில்வே சார்பில் பைப் லைன் அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends