Mnadu News

அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி மே 29 வரை நீடிக்கும்.

கோடை காலம் மார்ச் முதல் ஜூன் வரை இருக்கும். இந்த 4 மாத காலத்தில் மே மாதம் மட்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும். சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரையுள்ள காலகட்டமே மிக அதிக வெப்பமுள்ள காலம். இதை கத்திரி வெயில் எனப்படும் ‘அக்னி நட்சத்திரக் காலம்’ என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. இது நடப்பு ஆண்டு நாளை தொடங்கி மே-29 ஆம் தேதி வரை இருக்கும்.அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட் முதல் 107 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் எனத் தெரிகிறது.

Share this post with your friends