நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் போன்ற பிரபலங்களோடு ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொள்வது, அவர்களுடன் சேர்ந்து வீடியோ எடுப்பது போன்றவை ரசிகர்கள் பொதுவாக செய்யும் விஷயங்களில் ஒன்றுதான் .
ஆனால் இங்கு ஒரு நடிகரின் ரசிகர் அந்த நடிகர் மீது வைத்திருந்த அன்பினால் அவருக்கு ஏற்பட்ட விபரீதம் என்னவென்றால் பாலிவுட்டின் பிரபல நடிகரான அக்க்ஷய்குமார் ரசிகர் அவருடன் சேர்ந்து நடிக்கவேண்டும் என்ற ஆசையில் நேர்ந்த விபரீதம் தான் .
அரியானாவில் உள்ள அக்க்ஷய்குமார் அவர் வீட்டில் இருந்த போது அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வீட்டின் முன்பு வந்தார். ஆனால் அந்த ரசிகரை அக்ஷய்குமார் வீட்டின் காவலாளி அனுமதி மறுத்ததை அடுத்து நள்ளிரவு இரண்டு மணிக்கு அத்துமீறி அக்க்ஷய்குமார் வீட்டில் குதித்தார். அக்க்ஷய்குமார் உடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசையில் குதித்த அந்த அக்க்ஷய்குமார் ரசிகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
அக்க்ஷய்குமார் மீது ரசிகர்கள் நன்மதிப்பு வைத்துள்ள நிலையில், அவரது ரசிகரை கைது செய்யும் போது அவர் மௌனம் காத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.