அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மழை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, அடுத்த 48 மணி நேரத்துக்கு மிக கனமழை பெய்யும் என அறிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.இந்த நிலையில், பக்சா, பர்பேடா, டர்ராங், தேமாஜி, துப்ரி, கோக்ரஜார், லக்ஷிம்பூர், நல்பாரி, சோனித்பூர், உதால்குரி ஆகிய 10 மாவட்டங்கள் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இம்மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் நிர்வாக ஆணையம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More