துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அஜித் தமது அடுத்த படத்துக்கான பணிகளில் ஈடுபட துவங்கி உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலரும் சக முன்னணி நடிகர்கள் படங்களில் கௌரவ தோற்றத்தில் அதுவும் முக்கியமான காட்சியில் தோன்றி மாஸ் காண்பித்து வருகின்றனர். இது ஒரு டிரெண்ட் ஆகி உள்ளது.

விக்ரம் படத்தில் சூரியா, ஜவான் படத்தில் விஜய் போல தற்போது ஒரு பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, அஜித்தின் 62 படத்தில் தனுஷை கௌரவ தோற்றத்தில் நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் முயன்று வருகிறார் எனவும், அதற்கும் தனுஷ் ஓகே சொல்லி விட்டார் எனவும் சொல்லப்படுகிறது. விரைவில் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
