நகைச்சுவை நடிகர் விவேக் நடித்துள்ள ‘வெள்ளைப்பூக்கள்’ படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, ஒரு படத்தை இயக்கும் திட்டம் வைத்துள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து விவேக் அளித்துள்ள பேட்டியில் “என்னிடம் ஒரு காமெடி கலந்த விவசாயம் குறித்த கதை உள்ளது.
அந்த படத்தில் அஜித் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அஜித் ஒரு முழு நீள காமெடி படத்தில் நடித்து ரொம்ப நாளாகிறது. இந்த படம் முதல் பாதி வரை முழுக்க முழுக்க காமெடியாக சென்று இறுதியில் ஒரு சீரியஸான விஷயத்தை சொல்லும் படம்” என அவர் கூறியுள்ளார்.