Mnadu News

அடர்ந்த வனப் பகுதியிலிருந்து மீட்க உதவிய ஐ போன்: நெகிழ்ச்சியில் மாணவர்கள்.

அமெரிக்காவின் யூட்டாவின் பள்ளத்தாக்கு பகுதிக்கு மூன்று மாணவர்கள் எதிர்பாராத விதமாக சிக்கினர். அதையடுத்து,வெப்பநிலை குறைந்த காரணத்தால் இருவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் சிக்கிய அந்த இடத்தில் மொபைல் நெட்வொர்க் இணைப்பும் இல்லாத காரணத்தால் வெளி உலகை உதவி வேண்டி அவர்களால் தொடர்பு கொள்ள முடியாத கையறு நிலை ஏற்பட்டது. இருந்தாலும் உடன் சென்ற ஒருவர் தன் ஐபோன் 14 பயன்படுத்தி சாட்டிலைட் துணைகொண்டு அவசர உதவி வேண்டும் என எஸ்ஓஎஸ் தொடர்பை அமெரிக்காவின் ‘911’ எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். அந்த பதிவை பெற்ற மீட்புக் குழுவினர் அந்த இடத்திற்கு ஹெலிகாப்டரில் விரைந்து, அந்த மாணவர்களை காப்பாற்றி உள்ளனர். இந்த சம்பவம் மனித வாழ்க்கையில் தொழில்நுட்பத்தின் அவசியத்தை எடுத்துச் சொல்லும் வகையில் அமைந்துள்ளதாக பலரும் நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends