Mnadu News

அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகளை ஏவிய வட கொரியா! அதிர்ச்சியில் ஜப்பான்!

வடகொரியா இந்த வருடம் மிக தீவிரமாக ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சிக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்து வருகிறது.

இன்று இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்துள்ளது வட கொரியா என ஜப்பானின் கடலோர காவல்படை தகவல் வெளியிட்டு உள்ளது. அந்த ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களுக்கு வெளியே விழுந்ததாகத் தெரிகிறது.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்த தயாராகி வருகிறார் என தென் கொரிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளும் பல மாதங்களாக எச்சரித்து விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends